ஐ.ஐ.டி. விவகாரத்தில் சர்ச்சை டுவிட் போட்ட ஹெச். ராஜா

சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க., தேசிய செயலாளர் ஹெச். ராஜா டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க., தேசிய செயலாளர் ஹெச். ராஜா டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், இது இந்தி திணிப்பு என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காத போக்கு தொடர்ந்து நடந்து வருவதாக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

மத்திய அரசின் மீதான இந்த குற்றச்சாட்டுகளால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச். ராஜா, வைகோவை ஒருமையிலும் திட்டி தீர்த்தார். இந்த நிலையில், தற்போது, தமிழ்த்தாய் வாழ்த்து சம்பவம் குறித்து ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆணும், பெண்ணும் முத்தமிடும் காட்சி போன்ற புகைப்படத்தை பதிவிட்டு,  வைகோ, ஸ்டாலின் கவனத்திற்கு : சென்னை ஐ.ஐ.டி.ல் தமிழ்ப் பண்பாடு வளர்த்த போது என குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...