ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரத்திற்கு 5 நாள் காவல்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ., கைது செய்து நீதிமன்றம் அனுமதியுடன் ஒருநாள் விசாரணைக்கு அழைத்து சென்றது. விசாரணை முடிந்ததும், கார்த்தி சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்கள் தொடங்கியது. இந்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரலாக துஷார் மேத்தா சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக ஆஜரானார். 

அப்போது, கார்த்தி சிதம்பரத்திடம் ஒருநாள் விசாரணையில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்றும், வழக்கு தொடர்பான அடிப்படை கேள்விக்கே அவர் பதில் அளிக்க மறுப்பதாகவும் கூறப்பட்டது. எனவே, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 2 வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. மேலும், கார்த்தி சிதம்பரம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் வாதம் செய்யப்பட்டது.

கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதாடிய அபிஷேக் சிங்வி, கார்த்தி மீது போடப்பட்டுள்ள வழக்கு வினோதமானது. கார்த்தியை கைது செய்தது ஏன் என்று சி.பி.ஐ. விளக்கம் அளிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு கார்த்தி ஒத்துழைப்பு அளித்தார். சம்மன் அளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சி.பி.ஐ., எப்படி கூற முடியும். இந்திராணி முகர்ஜியின் வாக்கு மூலத்தை சிபிஐ வெளியிட்டது ஏன்..? என வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததும், கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 6-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சி.பி.ஐ.,க்கு அனுமதி வழங்கியது. 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 5 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...