மதுரையில் போலீசாரை தாக்கிய இரு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

மதுரையில் போலீஸ் சோதனையின் போது, போலீசாரை தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மதுரை : மதுரையில் போலீஸ் சோதனையின் போது, போலீசாரை தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிக்கந்தர் சாவடிப் பகுதியில் மாநகர காவல்துறை தனிப்படை போலீசார் ரவுடிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, சில ரவுடிகள் தப்பி ஓடினர். சில ரவுடிகள் போலீசாரை கடுமையாக தாக்கினர்.  இதனால், போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில், ரவுடிகள் மந்திரி (எ) இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் பலியாகி உள்ளதாக முதல் கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இரு ரவுடிகளின் உடல்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு ரவுடிகளின் மீதும் ஏராளமான கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையிலுள்ள மிக முக்கிய நபர் ஒருவரை கொலை செய்ய இரு ரவுடிகளும் திட்டம் தீட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போது மோதல் ஏற்பட்டதால், இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரவுடிகள் தாக்கியதில் போலீஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், போலீஸ் வருவதை அறிந்த சென்னையை அயானாவரத்தை சேர்ந்த ரவுடியான மாயக்கண்ணன் தப்பிச் சென்று விட்டதாகவும், அவர் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...