ஐ.என்.எக்ஸ்., மீடியா லஞ்சம் பெற்ற விவகாரம் : ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., முடிவு

அந்நிய முதலீட்டிற்காக ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

அந்நிய முதலீட்டிற்காக ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, அந்த செல்வாக்கை பயன்படுத்தி அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கார்த்தி சிதம்பரம் கடும் நெருக்கடி கொடுத்து இந்த முறைகேட்டை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கு கமிஷன் கட்டணமாக ரூ.10 லட்சம் டாலரை கார்த்தி சிதம்பரம் பெற்றதாகக் கூறப்பட்டது. இதற்கான ஆவணத்தை ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.

இதனிடையே, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் இந்திராணி முகர்ஜி, பிரீத்தம் முகர்ஜியை, கார்த்தி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு பல்வேறு முறைகேடுகளைச் செய்ததாக சி.பி.ஐ. கருதுகிறது. குறிப்பாக, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பணப்பரிமாற்றம் முழுவதையும் கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக கட்டுப்படுத்தி வந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

ஐ.என்.எக்ஸ் நிறுவனம் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெறாமல் ரூ. 305 கோடி பெற்றது குறித்து இந்திராணி முகர்ஜி, சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளிந்திருந்தார். அந்த வாக்குமூலம்தான் கார்த்தி சிதம்பரம் செய்த முறைகேடுகளை உறுதிப்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்தே, சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டு கார்த்தி சிதம்பரத்தை நேற்று கைது செய்தனர்.

கார்த்தி சிதம்பரம் கைதான தகவல் அறிந்ததும் வெளிநாட்டில் இருந்த ப.சிதம்பரம் உடனடியாக நாடு திரும்பினார். இன்று கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிதம்பரமும் அங்கு வந்தார். இந்நிலையில், இந்திராணி முகர்ஜி தனது வாக்குமூலத்தில் சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிட்டு இருந்ததாகவும், இதனால் அவரை விசாரிக்க சி.பி.ஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறுகையில், “கார்த்தியை சட்டம் வளைத்துள்ளது. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விரைவில் சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பும்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...