பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: கோவையில் சுமார் 37,000 பேர் தேர்வு எழுதுகின்றனர்

நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை கோவை மாவட்டத்தில் சுமார் 37.000 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை கோவை மாவட்டத்தில் சுமார் 37.000 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை( வியாழக்கிழமை) தொடங்கி, ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பொதுத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுத உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 36,828 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். கோவை மாநகரில் மட்டும் 30,028 பேரும், பொள்ளாச்சி தாலுகாவில் 6,800 பேரும் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கென 113 மையங்கள் (கோவையில் 86 மையங்கள், பொள்ளாச்சியில் 27 மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் 1,729 பேர், 7 மையங்களில் தேர்வை எழுதுகின்றனர். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 278 புதிய தேர்வு மையங்கள் மாணவர்களின் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்காக மொத்தம் 45 ஆயிரத்து 380 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட இருக்கின்றனர். 

அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களைப் பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மை கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலுவலர்கள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மைய வளாகத்திற்கு செல்போன் எடுத்துவருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி, உரிய தண்டனைகள் வழங்கப்படும். மேலும் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்தும், தேர்வு மையத்தினை ரத்து செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 103 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் குறித்த புகார்களை தெரிவிக்க தேர்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு 8012594105, 8012594115, 8012594120, 8012594125 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பேசலாம்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...