கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி: புளுவேல் விளையாட்டு காரணமா?

மதுரையில் கல்லூரி மாணவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததற்கு புளுவேல் விளையாட்டு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை: மதுரையில் கல்லூரி மாணவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததற்கு புளுவேல் விளையாட்டு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை நேதாஜிரோடு அருகில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நேற்று விக்னேஷ்-ன் பெற்றோர்கள் அழகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் சக நண்பர்களின் பேஸ்புக் பக்கத்தில் தான் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இவரின் சக நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் வீட்டின் புட்டை உடைத்துப் பார்த்த பொழுது கையை பிளேடால் அறுத்து ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் கிடந்துள்ளார். அவரை மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவர் விக்னேஸ் தற்கொலை முயற்சிக்குக் காரணம் காதல் தோல்வியா? அல்லது புளுவேல் விளையாட்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...