ஸ்ரீதேவி மரணத்திற்கு இதுதான் காரணமா...! : தடவியல் பரிசோதனை அறிக்கையில் தகவல்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தடயவியல் துறையினரின் அறிக்கை சீலிடப்பட்ட கவரில் துபாய் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



பிரபல நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கியதால் மரணமடைந்திருப்பதாக துபாய் தடயவியல் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். 



திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி (54) மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். குறைந்த ரத்த அழுத்தத்தால், ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. உயிர் பிரிந்த நிலையில்தான் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது, அவரது உடல் அல்-குவாசிஸ் பகுதியில் உள்ள காவல்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தடயவியில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தடயவியல் துறையினரின் அறிக்கை சீலிடப்பட்ட கவரில் துபாய் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில், ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் இருந்த போது மூழ்கியதால் இறந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குற்ற நோக்கமோ, கிரிமினல் குற்றமோ இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர் மாரடைப்பு காரணமாக குளியல் தொட்டியில் மூழ்கியிருக்கலாமா என்று உறுதியான தகவல் ஏதுமில்லை.

ஸ்ரீதேவியின் உடலுக்கு இரண்டாம் பிரேதப் பரிசோதனை அவசியமில்லை என்று தடயவியல் துறை முடிவு செய்துள்ளதாக துபாய் ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லோருக்கும் பின்பற்றப்படும் நடைமுறையே ஸ்ரீதேவிக்கும் பின்பற்றப்படுவதால் ஸ்ரீதேவி உடலை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. பிரதேப் பரிசோதனை அறிக்கை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் அடுத்தகட்ட நடைமுறைகள் அனைத்தும் தாமதமாகியுள்ளன. இதனால் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுமா அல்லது நாளை காலை நடைபெறுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

உடலைக் கொண்டு வருவதற்கான நடைமுறைகள் :-

சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாகப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையில், துபாயின் சட்டதிட்டங்களே இந்த தாமதத்திற்கு காரணம். துபாய் விதிமுறைகளின்படி, மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தால் அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் நடைமுறைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். ஒருவேளை மருத்துவமனைக்கு வெளியில் ஒருவரது மரணம் நிகழ்ந்தால், அது இயற்கையான மரணமாக இருந்தாலும் முறையான விசாரணை நடத்தப்படும்.

மரணம் குறித்து முதலில் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் விசாரித்து, வழக்குப்பதிவு செய்வர். ஒருவேளை இறுதிச்சடங்கிற்காக இறந்தவரின் உடல் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்படுவதாக இருந்தால் பல கட்ட நடைமுறைகள் உள்ளன. இறந்தவரின் உடலில் முதலில் போலீஸ் தலைமையக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். பின் தடயவியல் ஆய்வுகள் நடத்தப்படும். பின்னர் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். பிரேத பரிசோதனை அறிக்கை, இறப்பு சான்றிதழ் போலீசாரிடம் தரப்படும்.

பிறகு இறந்தவரின் விசா காலம் குறித்து போலீசார் விசாரித்து, துபாயில் உள்ள இந்திய தூதகரத்தால் இறந்தவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். இறப்பு சான்றிதழ் அடிப்படையில், உடலை இந்தியா கொண்டு வர தடையில்லா சான்று வழங்கப்படும். மருத்துவமனை அல்லது பிணவறையில் இருந்து உடலைப் பெறுவதில் துவங்கி, எம்பார்மிங் செய்தல், இறுதி சடங்கிற்காக கொண்டு செல்லப்படும் இடம், விமானநிலையம், விமானத்தில் உடலை ஏற்றுவது வரை போலீசாரின் கடிதம் பல இடங்களில் அளிக்கப்பட வேண்டும்.

இறப்பு சான்றிதழ் அரபு மொழியிலேயே அளிக்கப்படும். அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, துபாய் இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்பட்டு, தடையில்லா சான்றிதழ் பெறப்படும். அதன் பிறகு இந்தியா கொண்டு செல்வதற்காக குடும்பத்தார் அல்லது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...