ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் 21-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மக்களுக்கு இடையூறாக நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்ததுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேசமயம் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

“மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இனி நீங்கள் மக்களுக்கு இடையூறு இன்றி போராட்டம் நடத்துவீர்கள் என நம்புகிறேன். தங்கள் அலுவலக வளாகம் மற்றும் தனியார் இடங்களில் போராட்டம் நடத்தினால் அதில் நீதிமன்றம் தலையிடாது” என்றார் தலைமை நீதிபதி.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...