சிறுவனை கொன்று தாயையும், சகோதரியையும் பாலியல் பலாத்காரம் செய்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை

விழுப்புரம் அருகே தாயையும், சகோதரியையும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, 8 வயது சிறுவனை கொலை செய்த மர்ம கும்பலை கைது செய்ய 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது


விழுப்புரம் அருகே தாயையும், சகோதரியையும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, 8 வயது சிறுவனை கொலை செய்த மர்ம கும்பலை கைது செய்ய 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

அரகந்தநல்லூர் பகுதிக்கு அருகேயுள்ள வேலம்புதூர் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை (பிப்.,22) அன்று நள்ளிரவில் மர்ம கும்பல் தலீத் குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்தது. அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியையும், அவரது தாயாரையும் அந்த மர்ம கும்பல் கொடூரமாகத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மேலும், வீட்டில் இருந்த 8 வயது சிறுவனையும் கொடுமையாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனது. 



மறுநாள் காலையில் வெகுநேரம் ஆகியும் வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, தாய், மகள், மகன் என மூவரும் இரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல முற்பட்ட போது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாரின் உதவியுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த சிறுவனின் தாயையும், சகோதரியையும் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவர்கள் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட தலீத் குடும்பத்திற்கும், அவர்களுக்கு அருகில் இருந்த பிற சமூகத்தை சார்ந்த குடும்பம் ஒன்றிற்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. அதன் அடிப்படையிலேயே, இந்தக் கொடூரத் தாக்குதல் நடந்திருக்கலாம், என்றனர். இதைத் தொடர்ந்து, தலீத் சிறுவனை கொலை செய்துவிட்டு அவரின் தாயையும், சகோதரியையும் பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 



விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குப் பிறகு தலீத் சமூகத்தினர் மீது நடத்தப்படும் 3-வது கொடூரத் தாக்குதல் இதுவாகும். விழுப்புரம் பகுதியில் தலீத் சமூகத்தினர் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...