கணவரின் இறுதி ஊர்வலத்தில் கைக்குழந்தையுடன் ராணுவ உடை அணிந்த பெண்ணின் கம்பீர நடை

பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ சீருடையில் கம்பீர நடை போட்டு வந்த பெண் அதிகாரியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ சீருடையில் கம்பீர நடை போட்டு வந்த பெண் அதிகாரியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய விமானப்படையின் விங் கமாண்டரான டி.வட்ஸ் மற்றும் அவரது மனைவி மேஜர் குமுத் மோர்கா. கடந்த பிப்., 15-ம் தேதி அசாமில் நடந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் கமாண்டர் டி.வட்ஸ் உயிரிழந்தார். அவரது மனைவியான ராணுவ மேஜர் குமுத் மோர்கா, அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், வட்ஸ் இறந்த சில நாட்களில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் தனது கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் ராணுவ சீருடையில் கனத்த இதயத்துடனும், கம்பீர நடையுடனும் குமுத் மோர்கா கலந்து கொண்ட நிகழ்வு காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...