ஆட்சியை தொட்டு கூட பார்க்க முடியாது : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்

தங்களது ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது என ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தங்களது ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது என ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி, à®….தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவ சிலை திறக்கப்பட்டது. அப்போது, நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஜெயலலிதா இயக்கத்தை கட்டிக்காத்து நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு பிரிந்திருந்த அதிமுகவை ஒன்றிணைத்தார் ஜெயலலிதா. இந்தியாவிலேயே ஒரு கட்டுப்பாட்டோடு உள்ள இயக்கம் à®….தி.மு.க., என்பதை ஜெயலலிதா நிரூபித்தார். இந்தியாவிலேயே கட்டுக்கோப்பாக கட்சியை வழி நடத்திய ஒரே தலைவர் ஜெயலலிதா தான். 

ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பயணித்து கொண்டிருக்கிறோம்.  எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது. எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:- இந்த அ.தி.மு.க., ஆட்சியை நடத்துவது ஜெயலலிதா. கட்சியை நடத்துவது தொண்டர்கள். அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும். ஒரு விரல் எம்.ஜி.ஆர்., மறு விரல் ஜெயலலிதா என வாழ்ந்து வருகிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

மக்களை நாங்கள் காப்பாற்ற போகிறோம் என்பவர்கள் பேச்சு விரைவில் புஸ்வாணமாகிவிடும். மக்களை காப்பாற்றும் ரட்சகர்கள் போல் ஒருசிலர் வீர வசனம் பேசுகிறார்கள். ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். அ.தி.மு.க.,வை வெல்ல நினைத்த கட்சிகள் எல்லாம் காற்றில்லாத பலூன்களாக சுருங்கிக் கிடக்கின்றன. அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்கத் தொடங்கியுள்ளன.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...