கேரளாவில் கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

கேரளாவில் உணவுப் பொருட்களை திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உணவுப் பொருட்களை திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

கேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்தவர் மது (27). ஆதிவாசி இனத்தை சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வசித்து வந்தார். அடிக்கடி கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் வாங்கி செல்வார். நேற்று முன்தினம் இதேபோல, கிராமத்திற்கு சென்று உணவு பொருட்களை வாங்கி விட்டு காட்டுப்பகுதிக்கு சென்றார். மது உணவுப் பொருட்கள் வாங்க சென்ற கடை வீதியில் அடிக்கடி அரிசி திருட்டு சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. 

இந்நிலையில், அரிசி திருடுபோன சம்பவத்தில் மதுவுக்கு தொடர்பு இருக்குமென்று கடைக்காரர்கள் சந்தேகப்பட்டனர். நேற்று முன்தினம் அவர், அரிசி மூட்டையுடன் சென்றதை கண்டதும் அரிசி திருடிச்செல்வதாக நினைத்து அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து, கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்ததுடன், அவர் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து கைகளையும் கட்டி காட்டுமிராண்டித் தனமாக தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் துடித்த காட்சிகளை கொலை வெறி அடங்காத மனசாட்சி இல்லாத மக்கள் செல்ஃபி மற்றும் வீடியோக்களையும் எடுத்து வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராமி போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த கொடூரமான காட்சிகள் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தக் காட்சிகள் சமூக ஆர்வலர்கள், ஆதிவாசி நல ஆணைய உறுப்பினர்கள் பார்வைக்கும் சென்றன. உடனடியாக அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி அட்டப்பாடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிவாசி வாலிபர் மதுவை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். கட்டி வைத்து தாக்கப்பட்ட மது. வாகனத்தில் ஏறியதும் போலீஸாரிடம், அனைவரும் என்னை கொடூரமாக அடித்து உதைத்தனர். திருடன் என்று கூறி என்னை தகாத வார்த்தைகள் திட்டினர். நான், எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிய அவர், வாகனத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மதுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அட்டப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மது, போலீஸாரிடம் கூறிய கடைசி வார்த்தைகளைப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரித்தனர். இதில் முதல்கட்டமாக முக்காலி பகுதியைச் சேர்ந்த உசேன், மத்தாச்சன், மனு, அப்துல் ரகுமான், அப்துல் லத்தீப், அப்துல் கரீம், உம்மர் ஆகியோர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உசேன், கரீம் உள்பட 7 பேரை பிடி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மது கொலை சம்பவம் தொடர்பாக இன்று 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதிவாசி வாலிபர் மது கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். நாகரீக சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமில்லை. இது கேரளாவிற்கு அவமானம். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க திருச்சூர் சரக ஐ.ஜி. அஜித்குமாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் ஐ.ஜி. அஜித்குமார் தலைமையிலான போலீஸார் அட்டப்பாடி சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

மதுவின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை பிரேத பரிசோதனை நடத்தக்கூடாது என்று மதுவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மர்ம கும்பலால் அடித்துக்கொள்ளப்பட்ட ஆதிவாசி வாலிபரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...