ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை செய்வதே எங்களது கொள்கை: கமல்

ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை செய்வதே எங்களது கொள்கை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை செய்வதே எங்களது கொள்கை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நடிகர் கமலஹாசன், மதுரையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்தகட்ட பயணம் மற்றும் நடவடிக்கை குறித்து நடந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- புதுக்கட்சி என்பதால், காவிரி குறித்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு இல்லாவிட்டாலும், எங்கள் பணி தொடரும். புதுக்கட்சியாக சென்னைக்கு செல்கிறேன். வேலைகளை தொடர்வதற்கான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். அடுத்த மாத மத்தியில் பயணம் தொடரும். 

அடுத்த மாத நடுவில் வந்து கிராமங்கள் தத்தெடுப்பு திட்டம் தொடரும். அரசு ஒத்துழைப்பு வழங்கினால், அதற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும், கிராமங்கள் தத்தெடுப்பது தொடரும். கிராம நிர்வாகிகளுடன் ஒப்பந்தம் போட்டு, அவர்களுக்கு தேவையான உதவி செய்வோம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களை செழிக்க வழி செய்வோம்.

கட்சி உயர்மட்ட குழுவில் அறிஞர்கள், படித்தவர்கள், அறிவுள்ளவர்கள் சமூகஆர்வம் உள்ளவர்கள் இடம்பெற்றுள்ளனர். நாங்கள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். கட்சியைப் பொறுத்தவரை நான் தலைவனாக இருப்பேன். நேற்று கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தைக் காண அல்ல. உணர்வுப்பூர்வமாக மாற்றம் வர வேண்டும் என விரும்பியவர்கள் கூடினர். எத்தனை பேர் வந்தனர் என்பதை பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. விஞ்ஞான ரீதியாக எத்தனை பேர் கூடினர் என்பதை தெரிவிப்போம். சாதாரண மக்களுக்கு தெரிந்த நியாயத்தை வர்த்தகமாக்கிவிட்டனர். அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வோம். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் என்ஜிஓ பாணியில் இருப்பதில் என்ன தவறு.

நான் இடதா வலதா, என்றால் நான் மையத்தில் உள்ளேன். கிராமியம் என்பது தேசியமே. திராவிடத்தை இழக்கவில்லை. தேசியத்தையும் இழக்கவில்லை. நாடு முழுவதையும் திராவிடம் ஆக்கிரமித்துள்ளது. கட்சியில் உள்ள எட்டு முனை நட்சத்திரங்கள் தென்னாட்டு மக்கள். ஆறு கைகள் புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...