பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் பல்வேறு ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை நேற்று இரவு 8.30 மணியளவில் சோதனை செய்யப்பட்டது. இரவு நேரத்திலும் குறிப்பிட்ட இலக்கை அடையாளம் கண்டு தாக்கும் சோதனையில், கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மிகவும் துல்லியமாக தனது இலக்கை அடைந்தது.

இந்த ஏவுகணை 500 முதல் 1,000 கிலோ எடையை தாங்கும் சக்தி கொண்டது. திரவ எரிபொருளால் இயங்கும் தன்மை கொண்டது. இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. ஜனவரி 18-ம் தேதி நடந்த அக்னி-5 ஏவுகணை சோதனை, பிப்ரவரி 6-ம் தேதி நடந்த அக்னி-1 ஏவுகணை சோதனை, நேற்று முன்தினம் நடந்த அக்னி-2 ஏவுகணை சோதனை ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, பிரித்வி-2 ஏவுகணை சோதனையும் வெற்றி அடைந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் கடந்த 2003ம் ஆண்டு இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...