அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை, 10:30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் கூட்டம் தொடங்கியது.

இதில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி. ராமக்கிருஷ்ணன், திருமாவளவன், சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம், 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதற்காக குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்களை நேரில் சந்திக்க வேண்டும். எனக் கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதற்காக அனைத்து கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் குறித்து சரியான வாதம் எடுத்து வைக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சரியான வாதம் வைக்கப்பட்டதால் தான் நல்ல தீர்ப்பு கிடைத்ததாகப் பதிலளித்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...