பாவ விமோசனத்திற்காக ராமேஸ்வரம் வந்துள்ளார் கமல் : அமைச்சர் உதயகுமார் கடும் தாக்கு

பாவத்துக்கு விமோசனம் பெறுவதற்காகத்தான் கமலஹாசன் ராமேஸ்வரம் சென்றுள்ளதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

பாவத்துக்கு விமோசனம் பெறுவதற்காகத்தான் கமலஹாசன் ராமேஸ்வரம் சென்றுள்ளதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். 

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகரில் இன்று தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு ரூ. 60 லட்சம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் முதியோர் உதவித்தொகை ஆணைகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். 

பின்னர் அவர் பேசியதாவது :- ஜெயலலிதாவின் ஆன்மா காட்டிய வழியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க., அரசை செயல்படாத அரசு, முடங்கிப்போன அரசு, கையாலாகாத அரசு என விமர்சித்து வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ந் தேதியுடன் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார். அவரது ஆட்சியில் 5,408 கோப்புகளுக்கு உயிர் கொடுத்துள்ளார். ரூ. 5,127 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளார்.

ரூ. 5,712 கோடி மதிப்பிலான 3,200 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 521 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ரூ. 5,397 கோடி மதிப்பில் 8 லட்சத்து 11 ஆயிரம் பயனாளிகளுக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முதலமைச்சர், துணை முதல்-அமைச்சர், எங்களைப் போன்ற அமைச்சர்களால் நேரில் வழங்கப்பட்டவை ஆகும். மேலும், காணொளி மூலம் ரூ. 11 ஆயிரத்து 827 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். ரூ. 8,837 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இத்தனை திட்டங்களை செயல்படுத்தியுள்ள அரசு செயல்படாத அரசா..? முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அரசை விமர்சித்து வருகிறார்கள். காவிரி பிரச்சனையில் அரசு எடுத்த நடவடிக்கைக்கு குற்றம்சாட்டி வருகிறார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது எடுத்த சட்ட போராட்டம் காரணமாக உச்சநீதிமன்றம் இந்த மகத்தான தீர்ப்பினை வழங்கியுள்ளது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கர்நாடகத்தை விட தமிழகத்தின் மீதான காவிரியின் உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 242 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கிறது. டிசம்பர் -ஜனவரி காலங்களில் வடகிழக்கு பருவமழையின் போது காவிரியின் மூலம் கூடுதல் தண்ணீரும் கிடைக்கப்பெறுகிறது. இதை தமிழக மக்களும், விவசாயிகளும் நன்கு அறிவார்கள். காவிரி பிரச்சனையில் துரோகம் செய்தது தி.மு.க. தான். தமிழகத்தின் மீதான காவிரியின் உரிமையை நிலைநாட்ட அம்மா அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும்.

இன்றைக்கு ஒருவர் புதிய கட்சி தொடங்கப்போவதாக கூறி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். ராமேஸ்வரத்திற்கு எப்போது போவார்கள்..? கடைசி காலத்தில் செய்த பாவத்துக்கு விமோசனம் பெற தான் ராமேஸ்வரம் செல்வார்கள். அவரும் அதற்காகத்தான் சென்றுள்ளார். மாலையில் மதுரைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார். அவர் மதுரைக்கு வரட்டும். இங்கு கட்சிக்கும், கொடிக்கும் பஞ்சமில்லை. கொள்கைக்கும் பஞ்சமில்லை. அரசியலுக்கு வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

எம்.ஜி.ஆரும்- ஜெயலலிதாவும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மக்கள் சேவை செய்தனர். நாட்டின் பல்வேறு பிரச்சனைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இன்று புதிய கட்சி தொடங்கும் இவர், சினிமாவில் இருந்த போது மக்களுக்கு என்ன சேவை செய்தார். இது மக்களுக்கே தெரியும். இந்த அரசு ஏழைகளுக்கான அரசு, மக்களுக்கான அரசு. இந்த ஆட்சியை மக்கள் துணை நின்று காப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசுகையில், நீங்கள் 60 வயதில் உதவித்தொகை பெற இங்கு வந்துள்ளீர்கள். ஆனால், தற்போது 64, 68 வயது உள்ளவர்கள் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளனர். ஜெயலலிதாவின் ஆளுமை இல்லாததால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. மக்கள் இதனை ஆதரிக்க மாட்டார்கள் என்றார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம், நிர்வாகிகள் அண்ணாநகர் முருகன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...