இந்தியாவில் 13 இலக்க மொபைல் எண்கள் அறிமுகம்

வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 13 இலக்க மொபைல் எண்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 13 இலக்க மொபைல் எண்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் தற்போது செல்போன்களுக்கான எண்கள் 10 இலக்கங்கள் கொண்டதாக வழங்கப்படுகின்றன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 10 இலக்க எண்ணில்தான் வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டு எண்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல்  தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்கள் வழங்கப்படும் என பொதுத்துறை தொலைத்தொடர்பு துறை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. எண்கள் மாற்றும் நடைமுறை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது. 

மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்களை வழங்கும்படி அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களையும், தொலை தொடர்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதிதாக மொபைல் எண் வாங்குவோருக்கு ஜூலை 1-ம் தேதி முதல் 13 இலக்க எண்கள் வழங்கப்படும். தற்போது 10 இலக்க மொபைல் எண்கள் பயன்படுத்துவோர் இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் 13 இலக்க எண்களுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். 13 இலக்க எண்ணாக மாற்றுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஒன்றுடன் முடிவடைகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...