பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்கத் தடை

மகாராஷ்டிரா, ஹைதராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

மகாராஷ்டிரா, ஹைதராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. 

மலையாளத்தில் தயாராகும் ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலரய பூவி’ பாடலுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த பாடலில் உள்ள வரிகள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி, அதில் நடித்துள்ள பிரியா வாரியர் மீதும், படத்தின் இயக்குநர் ஒமர் லூலு மீதும் ஐதராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, மும்பை காவல் ஆணையாளரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலத்திலும் வழக்கு பதிவாகி உள்ளது. இதனை எதிர்த்து பிரியா வாரியர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் கேரளாவில் 40 வருடங்களாகப் பாடப்பட்டு வருகிறது. பாடல் வரிகள் திடீரென மத உணர்வுகளைப் புண்படுத்தி விடாது. பாடல் வரிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆதாரமற்ற புகார்களால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது சட்டமீறல். கற்பு குறித்து கருத்து தெரிவித்ததற்காக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் அவரை உச்சநீதிமன்றம் விடுவித்ததைப்போல இந்த வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மலையாளப்பட நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. மகாராஷ்டிரா, ஹைதராபாத்தில் காவல்நிலையங்களில் தரப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை கூடாது எனவும் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...