ஆட்சியாளர்கள் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அள்ளிவீசுகின்றனர்: நடிகர் கமல்

ஆட்சியாளர்கள் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அளித்துவிட்டு, அதனை நிறைவேற்றவில்லை என மீனவர்கள் மத்தியில் பேசிய நடிகர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆட்சியாளர்கள் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அளித்துவிட்டு, அதனை நிறைவேற்றவில்லை என மீனவர்கள் மத்தியில் பேசிய நடிகர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

ராமேஸ்வரத்தில் குடியரசு முன்னாள் தலைவர் கலாமின் இல்லத்தில் இருந்து இன்று காலை முறைப்படி தனது அரசியல் பயணத்தை துவக்கினார் கமல். பின்னர், மண்டபம் மீனவர்களுடன் அவர் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மண்டபம் கணேஷ் மஹாலில் கூடி இருந்த மீனவர்களிடம் 4 நிமிடங்கள் மட்டுமே கமல் பேசினார். அவர்களிடம் கருத்து கேட்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், மீனவர்கள் அதிருப்தியடைந்தனர். 

மீனவர்களிடம் நடிகர் கமல் பேசியதாவது :- தமிழகத்தின் மிக முக்கிய தொழில்களில் உங்கள் தொழிலும் ஒன்று. அது பாதுகாக்கப்பட வேண்டும். நீங்கள் பாதுகாப்பான முறையில் உங்கள் தொழிலை மேற்கொள்ள வேண்டும். உங்களின் சுகதுக்கங்களை பத்திரிகைகள் மூலம் அறிந்து கொள்வதற்கு பதிலாக நேரடியாக அதைக் கேட்டறிவதற்காகவே இங்கு வந்தேன். உங்கள் வாய்மொழியில் அவற்றை அறிய கடமைப்பட்டுள்ளேன். இனி அப்படித்தான் நடக்கும். அந்த வாய்ப்பை நான் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க ஆசைப்படுகிறேன். நீங்களும் எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள்.

வெவ்வேறு அரசுகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அவற்றை நிறைவேற்றவில்லை. மீனவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டியது எங்களின் கடமை. இன்று மாலை கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். அந்த கூட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும். வர கடமைப்பட்டவர்கள் வந்தே ஆக வேண்டும், என்றார். பின்னர், மீண்டும் வேறு ஒரு நாளில் மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதனிடையே, நடிகர் கமலிடம் மீனவர்கள் தங்களின் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, மீனவ பிரதிநிதிகள் பேசியதாவது : எங்கள் பிரச்சினையை கமல் கையில் எடுத்திருப்பதால் உலகம் முழுவதும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கிறோம். எங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. சிறையில் ஒருவர் மேல் ஒருவர் படுத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களும் கண்டுகொள்ளவில்லை. 

எங்கள் கோரிக்கையை கேட்க வந்த நண்பருக்கு தகவல் தெரிவிக்கிறோம். நாங்கள் பல கோடி ரூபாய் அன்னிய செலாவணி கொடுத்தாலும், வரி போட்டு எங்களை கொல்கின்றனர். மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. படகை பிடித்தால் மீனவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், பல கோடி ரூபாய் அபராதம் விதித்தும் இலங்கை சட்டம் கொண்டு வந்துள்ளது. இது சர்வாதிகாரபோக்காக தெரிகிறது. இந்த மாதிரி எச்சரிக்கை யாரும் கொடுத்தது இல்லை. இதனை எங்கள் அரசு கண்டுகொள்ளவில்லை.

மீன்பிடிக்க முடியாத நிலையில் உள்ளோம். அரசு மாற்று வழி கேட்டும் செய்யவில்லை. செய்கிறோம் செய்கிறோம் என கூட்டம் போட்டு எங்களை அலைக்கழிக்கின்றனர். சுஷ்மாவை சந்தித்தோம். 'மடியேந்தி பிச்சைக் கேட்கிறேன் அங்கு மீன்பிடிக்காதீர்கள்' எனக் கூறினார். தேர்தலுக்கு முன் அவரும், பிரதமர் மோடியும் பல வாக்குறுதி கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை. துடுப்பாக கமல் எங்களுக்கு கிடைத்துள்ளார். எங்கள் கோரிக்கையை கேட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மீனவர்களுக்கு கட்சி எதுவும் இல்லை. இவ்வாறு அவர்கள் பேசினர். தொடர்ந்து, மீனவர்கள் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...