'கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே எனது பயணத்தை தொடங்கியது பெரும்பேறு'

அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கிய கமலஹாசன், கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே எனது பயணத்தை தொடங்கியது பெரும்பேறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கிய கமலஹாசன், கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே எனது பயணத்தை தொடங்கியது பெரும்பேறு எனக் குறிப்பிட்டுள்ளார். 

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை நடிகர் கமலஹாசன் தொடங்கினார். கலாம் வீட்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாமின் பேரன் சலீம் அப்துல்கலாம் படம் பொறித்த நினைவுப் பரிசை கமலுக்கு வழங்கினார். அப்துல்கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து கமலஹாசன் வாழ்த்துக்கள் பெற்றார். இதனையடுத்து, கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர், அவர் தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார்.

இந்நிலையில், கலாம் வீட்டுக்குச் சென்றது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டுள்ளார். “பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்”, என கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல் புதிய அரசியல் கட்சியை இன்று துவக்குகிறார். மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்கிறார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...