நியாய விலைக் கடையில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது : அமைச்சர்

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உணவு வழங்கல் மண்டல முதுநிலை மேலாளர் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :-  தமிழகத்தில் இதுவரை 99 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மார்ச் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருள்கள் வாங்கும் முறை முழுவதுமாக அமலுக்கு வருகிறது. மார்ச் 1-ம் தேதி ஸ்மார்ட் கார்டு கட்டாயம். இருப்பினும், ஸ்மார்ட் கார்டு இல்லை என்பதற்காக ரேஷன் பொருள்கள் மறுக்கப்படாது. பயனாளர்களுக்குத் தேங்காய் எண்ணெய் வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. மசூர் பருப்பு கொள்முதல் செய்யப்படவில்லை. எனவே, இந்த மாதம் முதல் நியாயவிலைக் கடைகளில் மசூர் பருப்பு வழங்கப்படாது.

ரேஷன் பொருள்களைக் கடத்துபவர்கள், உணவுப் பொருள்களை வழங்குவதில் மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த விவகாரங்கள் தொடர்பாக 1,037 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...