இனி வங்கி அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம்

வங்கிகள் அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

வங்கிகள் அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் பொதுத்துறை வங்கிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில், 2017 டிசம்பர் 31-ம் தேதியுடன் ஒரு கிளையில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இதுபோன்று 2017 டிசம்பர் 31-ம் தேதியுடன் ஒரு கிளையில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த ‘கிளர்க்’ பணியாளர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவின்படி, பாங்க் ஆப் பரோடா பணியை தொடங்கிவிட்டது என தகவல் வெளியாகி உள்ளது.

“மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதிகாரிகளுக்கான இடமாற்றம் விவகாரத்தில் வங்கியின் கொள்கையின்படி, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவியில் எந்தஒரு அதிகாரியும் இருக்க கூடாது, நகராட்சி வரம்புக்குள் உள்பட்ட கிளைகளில் 5 ஆண்டுகளாக இருக்க கூடாது,” என பாங்க் ஆப் பரோடா குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மோசடி நடந்து உள்ளது வெளியே தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு விசாரணை முகமைகள் விசாரித்து வருகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...