”அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல”

காவிரி நீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல, என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல, என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் அவர் பேசுகையில், ''இரட்டை இலைச் சின்னம், தலைமை கழகம் கிடைப்பதற்காகவும், 1 1/2 கோடி தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் à®….தி.மு.க., இணையப் பாடுபட்டோம். மேலும், பிரதமரை சந்தித்து ஆலோசனை கேட்டதில் கழகம் பிரியக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இணையக் கூறினார். அதன்படி, இணைந்தோம். தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சியைக் கலைக்க நினைக்கிறார். மத்திய அரசின் திட்டங்களில் ஜெயலலிதா எந்த நிலையை எடுத்தாரோ, அதே நிலையை நாங்கள் கடைபிடிக்கிறோம். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரிநீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி அனைத்து கட்சி கூட்டத்தினை முடிவு செய்யும் நேரத்தில், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார். ஆளும் கட்சிதான் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியும். காவிரி நீருக்காக ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, உண்ணாவிரதம் இருந்து நல்ல  தீர்ப்பினை பெற்று தந்ததோடு இல்லாமல், காவிரி ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்தார். சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால், அது பற்றி கருத்துக் கூற முடியாது.'' இவ்வாறு கூறினார்,

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...