வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் நீதிமன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

இதனை அடுத்து,  இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர். மேலும், ஸ்டாலின் தலைமையில் 23-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 10.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...