3-வது இன்னிங்சை தொடங்கினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கான் 63) மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கான் 63) மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். 

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், 1995-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித் என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்த நிலையில், 2004-ம் ஆண்டு ஜெமிமாவை விவாகரத்து செய்தார் இம்ரான் கான். அதன்பிறகு பத்திரிகையாளராக இருந்த ரெஹம் கான் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில மாதங்களிலேயே ரெஹம்கானையும் விவாகரத்து செய்தார். 

இந்நிலையில், உளவியல் ஆலோசனைகள் வழங்கும் புஷ்ரா மணீகா என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். லாகூரில் மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...