உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை குறித்து மு.க. அழகிரி கருத்து

சாக்கடையான அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் என உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை குறித்து மு.க.அழகிரி கருத்து தெரிவித்தார்.

சாக்கடையான அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் என உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை குறித்து மு.க.அழகிரி கருத்து தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் கொடியரசனின் மகள் கார்த்தீஸ்வரியின் திருமணம் இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மு.க. அழகிரி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, அரசியல் சாக்கடை தான். யார் வேண்டுமானாலும் வரலாம் என்று பதில் கூறினார். 

கடந்த ஜனவரி மாதம் உதயநிதி ஸ்டாலின் தனியார் டிவிக்கு பேட்டி அளிக்கும் போது மு.க.அழகிரி கட்சியில் இல்லை. கட்சியில் இல்லாதவரைப் பற்றி பேச தேவையில்லை எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...