நடிகர் கமலஹாசனின் சுற்றுப்பயண விபரம் வெளியீடு

பிப்.,21ல் நடிகர் கமலஹாசன் மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 4 பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.,21ல் நடிகர் கமலஹாசன் மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 4 பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ள கமல் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். வரும் 21-ல் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை துவக்க உள்ளார். இதற்கு ”நாளை நமதே” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அன்றைய தினமே மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கமலின் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, 21-ம் தேதி காலை 07.45 மணிக்கு அப்துல்கலாம் இல்லத்திற்கு வருகிறார். காலை 8.15 மணிக்கு அப்துல்கலாம் படித்த பள்ளிக்கும் செல்லும் அவர், காலை 8.50 மணியளவில் கணேஷ் மஹால் பகுதியில் மீனவர்களைச் சந்திக்க உள்ளார்.

காலை 11.10 மணியளவில் அப்துல்கலாம் நினைவிடத்திற்கு செல்லும் நடிகர் கமல், அங்கிருந்து 11.20 மணிக்கு மதுரை கிளம்புகிறார். நண்பகல் 12.30 மணியளவில் ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. பிற்பகல் 02.30 மணியளவில் பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்குச் சற்று முன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. பிற்பகல் 03 மணிக்கு மானாமதுரை ஸ்ரீபிரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 05 மணிக்கு மதுரை வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு எதிரே உள்ள ஒத்தக்கடை மைதானத்திற்கு வரும் நடிகர் கமல், 6 மணிக்கு கட்சி கொடி ஏற்றுகிறார். மாலை 06.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இரவு 8.10 முதல் 9 மணி வரை உரையாற்ற உள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...