காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழலை திசைதிருப்ப முயற்சி: நிர்மலா சீதாராமன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி செய்த மோசடி காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்றதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி செய்த மோசடி காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்றதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். இந்த மோசடி குறித்து மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- ஊழலில் சாதனை படைத்துள்ள காங்கிரஸ், வங்கி மோசடி குறித்து மத்திய அரசைக் குறை சொல்கிறது. அக்கட்சி தவறான குற்றச்சாட்டுகள் மூலம் நாட்டைத் தவறாக வழிநடத்தவும் முயற்சி செய்கிறது. உண்மையில். நிரவ் மோடி வங்கியில் மோசடி செய்தது கடந்த 2011ம் ஆண்டில் தான். மோசடியில் தொடர்புடைய கீதாஞ்சலி நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டில் பங்குச்சந்தை நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்.,13-ல் அந்த நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அதற்குப் பிறகு, 2 நாட்கள் கழித்து செப்.,15ல் அந்த நிறுவனத்திற்கு கூடுதலாக கடன் வழங்க அலகாபாத் வங்கிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதன் தொடர்புகளை இணைத்து பாருங்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எம். சிங்வியின் மனைவி அனிதா, நிரவ் மோடியின் நகைக்கடையுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ளார். 

குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தும், காங்கிரஸ் கட்சி தைரியமாகப் பா.ஜ.க., மீது குற்றம்சாட்டுகிறது. காங்கிரஸ் செய்த குழப்பங்களை மத்திய அரசு சரி செய்து வருகிறது. நிரவ் மோடி மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்ததும், அவரைப் பிடிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. நிரவ் மோடி நாட்டை விட்டு ஓடியிருக்கலாம். ஆனால், அவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...