நாணயங்களை பெற மறுக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை

நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

வங்கிக் கிளைகளில் ரூ. 10 மற்றும் ரூ. 5 போன்ற நாணயங்களை வாங்க மறுப்பதால், சிறு வணிகர்களும், நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்கள் கொண்டு வரும், 10, 5, 2, 1 ரூபாய் என அனைத்து நாணயங்களையும், வங்கிக் கிளைகள் ஏற்க வேண்டும். நாணயங்களை, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் செலுத்தினாலும், ரூபாய் நோட்டுகளாக கேட்டாலும், அதை வங்கிகள் ஏற்க வேண்டும். ஏற்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கிய காரணங்களுக்காக, வெவ்வேறு வடிவமைப்பில், 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. புழக்கத்தில் உள்ள, 14 வகையான, 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்பதால், மக்களும், வியாபாரிகளும் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...