எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் - 5 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது

மாநில அளவிலான டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் நடத்தி வந்த 5 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மாநில அளவிலான டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் நடத்தி வந்த 5 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மண்டல அளவிலான வாடகை டெண்டர் முறை மாற்றப்பட்டு புதிதாக மாநில அளவிலான டெண்டர் முறை அமல்படுத்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 12-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 4,500 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் இயக்கப்படாததால், சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டது. சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. தென்மண்டலத்தில் சுமார் 13 ஆயிரம் டன் எரிவாயு எடுத்துச் செல்லும் பணியும், 14 லட்சம் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் முடங்கியது.

6-வது நாளாக போராட்டம் நீடித்ததால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் ஓரிரு நாளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. எனவே, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, லாரி உரிமையாளர்களின் சில கோரிக்கைகளை ஏற்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நாமக்கல்லில் இன்று தென்மண்டல எல்.பி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூடி ஆலேசானை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, டெண்டர் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்திருப்பதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதேசமயம், லாரி உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கை பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், கடந்த 5 நாட்களாக நடந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...