கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கோரி ஸ்டிரைக்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த 14-ம் தேதி அம்மாநில அரசு அறிவித்த நிலையில், புதிய கட்டண உயர்வு மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் என்றும், புதிய கட்டண உயர்வின்படி சாதாரண பேருந்துகளில் ரூ.8-ம், விரைவு பேருந்துகளில் ரூ.11-ம் உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், பேருந்து கட்டண உயர்வை ரூ.8-க்கு பதிலாக ரூ.10ஆக உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கேட்டிருந்தனர். இது தொடர்பாக 15-ம் தேதியன்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை கட்டணத்தையும் ஏற்க தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால், தற்போது உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டண உயர்வு போதுமானதாக இல்லை எனக்கோரி கேரளா முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் இன்று (பிப்.,17) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். இதனால், கேரளாவில் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...