தமிழகத்தின் கையை விட்டுப் போன காவிரி வழக்கு கடந்து வந்த பாதை

கர்நாடகாவில் உற்பத்தியானாலும் தமிழகத்தில்தான் காவிரி அதிக தூரம் பாய்கிறது. ஆனால், இரு மாநிலங்களும் நீரை பங்கீட்டு கொள்வதில்தான் மிகப் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது.


கர்நாடகாவில் உற்பத்தியானாலும் தமிழகத்தில்தான் காவிரி அதிக தூரம் பாய்கிறது. ஆனால், இரு மாநிலங்களும் நீரை பங்கீட்டு கொள்வதில்தான் மிகப் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது. தற்போது காவிரி நதிநீர் பங்கீடு குறித்த இறுதி தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வெளியாக இருக்கிறது. இந்த வழக்கு குறித்தும் காவிரி பிரச்சினை கடந்த வந்த பாதை குறித்தும் சில தகவல்கள்...

 à®•ர்நாடகாவின் குடகு மலையில் பிறக்கும் காவிரி ஆறு, தமிழகத்தில் பாய்ந்து பூம்புகார் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என மூன்று மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் இந்த நதி கடந்து செல்கிறது. சுமார் 120 ஆண்டுகளாக நீடித்து வந்த காவிரி பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கில் 1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 1924 ஆம் ஆண்டு மைசூரு - கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர்ப் பகிர்வு நடந்துவந்தது. 1956-ல் மொழிவழி மாநில மறுசீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று. கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. எனவே புதிதாக கேரளா மற்றும் புதுச்சேரியும் காவிரி நீரில் பங்கு கேட்டன. இந்தப் பிரச்சினை ஓய்வதற்குள் 1974-ம் ஆண்டில் 50 ஆண்டுகால ஒப்பந்தம் நிறைவடைய பிரச்னை மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

1986-ல் தமிழக அரசு நடுவர்மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. உச்சநீதிமன்ற ஆணைப்படி, 1990-ம் ஆண்டு ஜூன் 2-ம் நாள் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசு, காவிரி நடுவர் மன்றம் அமைத்தது. நடுவர்மன்றத்திடம் கர்நாடகம் 465 டி.எம்.சி.யும், தமிழகம் 566 டி.எம்.சியும், கேரளா 99.8 டி.எம்.சியும் புதுச்சேரி 9.3 டி.எம்.சி நீரும் கேட்டன. இதனை நடுவர்மன்றம் ஏற்க மறுத்ததால் உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. நீர் வழங்கப்படும் என நடுவர்மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.

தமிழகத்திற்கு நீர் வழங்குவது தொடர்பாக கர்நாடகா அரசாணை வெளியிட அம்மாநிலத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. 1997-ல் மத்திய அரசு காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைத்தது. இது பிரதமரையும் நான்கு மாநில முதலமைச்சரையும் உறுப்பினர்களாகக் கொண்டது. கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. 2007-ல் பிப்ரவரி 5-ம் தேதியன்று நடுவர்மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதன்படி, கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டி.எம்.சி.

*இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டி.எம்.சி., ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி.,கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி. ஒதுக்கப்பெற்றது. தமிழகமும், கர்நாடகமும் இத்தீர்ப்பில் குறைகண்டு, மீளாய்வு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தன. இது ஒருபுறமிருக்க 2016-ம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தது. அதில், கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீர் ஒருபோக சாகுபடிக்கு மட்டுமே பயன்படுவதாகவும், இதனால், சம்பா பயிர்கள் கருகும் சூழல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாள்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க 2016-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது மாண்டியா, மைசூரு, ஹசன் மாவட்டங்களில் வன்முறையை ஏற்படுத்த கனத்த இதயத்துடனேயே தண்ணீர் திறக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். மேலும், தீர்ப்பை எதிர்த்து முறையீடும் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று இறுதி தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...