காவிரி தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர்மன்றத்தின் தீர்ப்பை மாற்றியமைத்து, தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நீரின் அளவைக் குறைத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர்மன்றத்தின் தீர்ப்பை மாற்றியமைத்து, தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நீரின் அளவைக் குறைத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது : தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு குறைத்தது வருத்தம் அளிக்கிறது. தமிழக விவசாயிகளை கர்நாடக காங்கிரஸ் அரசு வஞ்சித்து கொண்டிருந்தால், பா.ஜ.க, பொறுத்து கொள்ளாது. காவிரி நீர் கிடைக்காமல் போனதற்கு தி.மு.க.,விற்கும் பங்கு உண்டு. என்றார். 

தி.மு.க., மூத்த தலைவர் துரைமுருகன் பேசுகையில், ''இந்த தீர்ப்பு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தமிழக நலன் பறிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கை அ.தி.மு.க., அரசு சரியாக நடத்தவில்லை. இந்த வழக்கில் அ.தி.மு.க., அரசு குளறுபடி செய்துவிட்டது. இப்படிப்பட்ட தீர்ப்பு வருவதற்கு அ.தி.மு.க., அரசு தான் காரணம்.'' எனக் கூறினார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்ததாவது :- காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு தண்ணீரைக் கொடுப்பதற்கு பதில் கண்ணீரை கொடுத்துவிட்டது. என்றார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் அ.தி.மு.க., எம்.பி., நவநீத கிருஷ்ணன் கூறுகையில், தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. 10 டி.எ.ம்.சி., நீர் குறைக்கப்பட்டது தமிழகத்திற்குப் பின்னடைவு. இறுதி தீர்ப்பின்படி 192 டி.எம்.சி., தண்ணீர் போதாது. தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் மரணமடைகின்றனர். தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் பேசியதாவது :- காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். இதற்கு கர்நாடக அரசு ஒத்துழைக்க வேண்டும். என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்: உச்சநீதிமன்றம் தமிழக நலன்களைப் பாதிக்கும் வகையில் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாது என்பதை ஏற்க முடியாது. இவ்வாறு கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது :- ''காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. காவிரியை தனிப்பட்ட ஒரு மாநிலம் உரிமை கொண்டாட முடியாது என்பது வரவேற்கத்தக்கது. வாக்கு வேட்டையில் காவிரி சர்ச்சையை தூண்டிவிட்டு தேசியம் மறந்து பேசுகின்றனர்.  வாக்கு விளையாட்டு விளையாடுகிறேன் என்ற நோக்கில் சச்சரவை ஏற்படுத்திவிடக்கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு அழுத்தமாக உள்ளது சற்றே ஆறுதலாக இருக்கிறது. போராடுவது உதவாது. தீர்வு காண்பதற்காக முயற்சிப்பதே சிறந்தது. நாமெல்லாம் குரங்காக இருக்கும்போதுலிருந்து காவிரி ஓடிக்கொண்டிருந்தது. கிடைக்கும் தண்ணீரை பாசனத்திற்காக எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை யோசிக்க வேண்டும்”. எனக் கூறினார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...