ரயில்வேத்துறையில் டிரேக்மேனுக்கு அதிநவீன உபகரணங்கள் வழங்க முடிவு

ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேனுக்கு, ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.

ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேனுக்கு, ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. 

நாடு முழுவதும் ரயில்துறை மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயில்வே துறை சார்ந்த அதிகாரிகளின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேன், ரயில் வருவதை அறிய முடியாமல் படும் இன்னல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில்,  டிரேக்மேன்களுக்கு ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. 

அதாவது, ரக்ஷாக் எனப்படும் வாக்கி - டாக்கிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எல்.இ.டி.யின் மூலம் தகவலின் பேரில், தண்டவாளத்தில் இருந்து டிரேக்மேன்கள் விலகிச் செல்ல முடியும். மேலும், பிரத்யேக காலணிகள், கையுறைகள், ரெயின் கோட் (rain coat), குளிர் ஜாக்கெட் மற்றும் பல உபகரணங்களை வழங்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த ரக்ஷாக் கருவியானது தெற்கு மத்திய ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது. 

இதனிடையே, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஆடை பராமரிப்புகளுக்காக டிரேக்மேனுக்கு ஆண்டுதோறும் ரூ. 5 ஆயிரம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...