காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு

காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (பிப்.,16) தீர்ப்பு வழங்க உள்ளது.

காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (பிப்.,16) தீர்ப்பு வழங்க உள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.



இறுதி விசாரணையில் இதுவரை நடைபெற்ற வாதங்கள், ஆவணங்கள், நீர்வள நிபுணர்களின் கருத்துகள் அடங்கிய எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அந்தந்த மாநில வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு தொடர்பான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் கடந்த செப்டம்பர் மாதம் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளதால், கடந்த 20 வருடங்களாக இருந்து வந்த பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...