சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் மாதா நகரைச் சேர்ந்த பாபு, ஸ்ரீதேவி தம்பதியின் மகள் சிறுமி ஹாசினி. இவரை, பக்கத்து வீட்டுக்காரரான தஷ்வந்த் பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்றார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தஞ்வந்த்தை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

பின்னர், ஜாமினில் வெளியே வந்த அவர், பணத்துக்காகப் பெற்ற தாயையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினார். ஆனால், போலீஸழர் அவரை, மும்பை போலீஸாரின் உதவியுடன் மும்பையின் அந்தேரி பகுதியில் மறைந்திருந்த தஷ்வந்த்தை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பலகட்ட விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். 

இதையடுத்து, விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் 19-ம் தேதி வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...