எம்.எல்.ஏ. விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலிடத்துக்கு கடிதம்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத் திறப்பிற்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத் திறப்பிற்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது. நீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை திறக்கக் கூடாது என்று அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியையும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. ஆனால், காங்கிரஸ் கொறடாவாக இருக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ. மட்டும் ஜெயலலிதா படத் திறப்புக்கு ஆதரவு தெரிவித்தார். எண்ணற்ற திட்டங்களையும், சாதனைகளையும் செய்துள்ள ஜெயலலிதாவின் படம் திறப்பதில் தவறு இல்லை என்று கருத்தும் தெரிவித்தார்.

இது காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனியார் டி.வி. விவாதத்தில் கலந்து கொண்ட விஜயதரணி ராகுல்காந்திக்கு சவால் விடும் வகையில் கருத்து தெரிவித்து இருப்பது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு பெண் என்ற முறையில் நான் படத்திறப்புக்கு ஆதரவு தெரிவித்தேன். பேரவையில் 10 தலைவர்கள் படம் உள்ளது. அதில், ஆண்கள் தான் உள்ளனர். ஒரு பெண் தலைவருக்கு இடம் இல்லையா..? கட்சி முடிவின்படி நான் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

குற்றவாளி என்று அறிவித்த பின்புதான் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை ராகுல்காந்தியும், திருநாவுக்கரசரும் சென்று பார்த்தனர். இறுதிச் சடங்கில் ராகுல்காந்தி கலந்து கொண்டு சடங்கு முடியும் வரை இருந்தார். அப்போதெல்லாம் அவர் குற்றவாளி என்று தெரியவில்லையா? அன்று புறக்கணிக்க வேண்டியதுதானே? மரணத்துக்கு ஏது மரபு. நான் இப்படிச் சொல்வதால் என் மீது காங்கிரஸ் தலைமைக்குப் புகார் அனுப்பட்டும். தனிப்பட்ட முறையில் எனது உரிமையைப் பறிக்க யாராலும் முடியாது. அது ராகுல்காந்தியாக இருந்தாலும் சரி, திருநாவுக்கரசராக இருந்தாலும் சரி. கருத்து சொல்வது எனது தனிப்பட்ட உரிமை. கட்சி முடிவுப்படி பங்கேற்கக் கூடாது என்றார்கள் நான் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விஜயதரணியின் இந்தக் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு விவகாரங்களைக் கவனிக்கும் மேலிட பார்வையாளரான முகுல்வாஸ்னிக் ஆகியோருக்கு திருநாவுக்கரசர் அறிக்கை அனுப்பி உள்ளார். 

விலவங்கோடு தொகுதியில் இருந்து 2 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான விஜயதரணி ஏற்கனவே இளங்கோவன் தலைவராக இருந்தபோது அவருடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அ.தி.மு.க. பிளவுபட்ட போது டி.டி.வி. தினகரனையும் சந்தித்துப் பேசினார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார். எனவே, அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...