கோயில்களில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை : முதலமைச்சர்

தமிழகம் முழுவதும் கோயில்களில் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கோயில்களில் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :- பெரிய கோயில்களில் தீ தடுப்பு நடைமுறைகள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும். கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள கடைகளை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி அகற்றிட வேண்டும். ஒதுக்கப்பட்ட கடைகளை வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். 

பெரிய கோயில்களில் அமைந்துள்ள புராதன சிற்பங்கள், கட்டுமானங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தரமான மின் இணைப்புகளை அமைக்க வேண்டும். பெரிய கோயில் வளாகங்களின் அருகில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...