கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கில் வரும் 16-ம் தேதி தீர்ப்பு

லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வரும் 16-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கிறது

லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வரும் 16-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கிறது. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியது. மேலும், கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதால், அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதனையடுத்து, தன்மீதான லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும், தான் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் பிப்ரவரி 16-ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...