2019-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : தமிழக அரசு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அரசு சார்பில் 2015-ம் ஆண்டு செப்டம்பரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலீட்டாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டன. 

இந்நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை இந்த ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டது. இதுதொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர், இந்த ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். எனவே, ஆலோசனைக்குப் பிறகு மாநாடு நடக்கும் இடம், தேதி பற்றி விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்றும், இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018-ன் தனி அதிகாரியாக மாற்றுத்திறனாளிகள் நலக் கமிஷனர் வி. அருண் ராய் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...