'காலா' படத்தின் சண்டைக் காட்சிகள் இணையதளத்தில் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ’காலா’ மற்றும் ’2.0’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் படம் 'காலா'. இருவரது கூட்டணியில் வெளிவந்த 'கபாலி' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் 2-வது பட அறிவிப்பு வெளியானது. முதலில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் '2.0' படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் முடியாததால், 'காலா' படம் முதலில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. 

இரு தினங்களுக்கு முன்னர் படத்தைத் தயாரிக்கும் நடிகர் தனுஷ், 'காலா' படம் வரும் ஏப்ரல் 27-ல் திரைக்கு வரும் என அறிவித்திருந்தார். இதனால், இப்போதிலிருந்தே ரசிகர்கள் படத்தைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். 

இந்நிலையில், 'காலா' படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. அதில், ரஜினி, வில்லன் ஒருவரைத் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால், படக் குழு அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும், 25 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சிகள் எடிட்டிங் சமயத்தில் வெளியிடப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...