உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவைக் கண்டித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவைக் கண்டித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் வைரமுத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தின. கட்டுரை யாரேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக வைரமுத்து அறிவித்தார். இருப்பினும், வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். பின்னர், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தினை அவர் கைவிட்டார். மேலும், பிப்ரவரி 3-ம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை எனில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் எனவும் அவர் அறிவித்திருந்தார்.

ஜீயரின் இந்த அறிவிப்பையடுத்து, வைரமுத்து தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இந்த நிலையில், இரண்டாவது முறையாக கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். பா.ஜ.க தலைவர் எச் ராஜா, எஸ்.வி. சேகர் மற்றும் சென்பகராமன் ஜீயர் ஆகியோர் இன்று ஜீயரை சந்தித்து பேசினர். அப்போது, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவர்கள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜீயர் ராமானுஜ சடகோபன் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...