கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்: நடிகர் ரஜினி

அரசியல் களத்தில் நடிகர் கமலுடன் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் நடிகர் கமலுடன் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். உள்ளாட்சி  தேர்தல்களில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்த ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தல் குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்வேன் என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூயிருந்தார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், தனது கட்சி துவங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உறுப்பினர்களை இணைக்கும் பணியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்.  நடிகர் கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். என்றார்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக என்ற கேள்விக்கு வார இதழில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில், ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...