முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ., ஆவணங்கள்: அதிர்ச்சி தகவல்

ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் தொடர்பான சி.பி.ஐ.,யின் ரகசிய ஆவணம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீட்டில் சிக்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் தொடர்பான சி.பி.ஐ.,யின் ரகசிய ஆவணம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீட்டில் சிக்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

பல கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் வழக்கில் பல்வேறு விசாரணைகள் நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த விசாரணையில் எவ்வித ஆவணங்களும் எடுத்துச் செல்லப்படவில்லை என சிதம்பரம் கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., நிலவர அறிக்கையின் நகல் சிதம்பரம் வீட்டில் இருந்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த 2013ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகும். இது சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும். இவ்வாறான ரகசிய ஆய்வறிக்கை சிதம்பரம் வீட்டுக்கு எப்படி சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. 

ஏர்செல் - மேக்ஸிஸ் ஊழல் வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்குத் தொடர்பிருப்பதாக வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...