நச்சுத்தன்மை புகாரால் ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த முடிவு?

நச்சுத்தன்மை கொண்ட மசூர் பருப்பால், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதன் விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நச்சுத்தன்மை கொண்ட மசூர் பருப்பால், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதன் விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக அரசின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தில் உளுந்தம் பருப்பு வழங்கப்பட்டு வந்தது. பின்னர், தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக உளுந்தம் பருப்பு நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக மசூர் என்ற வகை பருப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கு மசூர் பருப்பு பயன்படுத்தப்பட்டது. இந்தப் பருப்பைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்பட்டதாகவும், முடக்குவாதம்போல கை, கால்களில் செயலிழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக, தமிழகத்தில் மசூர் பருப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு நுகர்வுப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதனிடையே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் மசூர் பருப்பு கொள்முதலுக்கான டெண்டரை உணவுத்துறை வெளியிட்டு, ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகிக்கப்பட்டது. அதேவேளையில், இவ்வகை பருப்பில் அடர் சிவப்பு நிறத்தில் சேர்க்கப்படும் நிறமி நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், இதனை விநியோகிக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, மசூர் பருப்பு கொள்முதலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இந்த நிலையில் மசூர் பருப்பு நச்சுத்தன்மை கொண்டது எனவும், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனவும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளது புகார்கள் வருவதால், ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்தி விட்டு, துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பு வழங்க முடிவு செய்து உள்ளதாக உணவுத்துறை தெரியவந்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...