ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் செயலாளர் மாற்றம்

ஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த தகவலையடுத்து தமிழக சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தனது விசாரணையைக் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் தன் மீது புகார் கொடுத்தவர்கள் யார், இதுவரை விசாரணை நடத்தியவர்களிடம் தங்கள் தரப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை சசி தரப்பு முன் வைத்தது. அதனடிப்படையில், சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, கடந்த ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரைக்கு ஆணையம் தனது விசாரணையை ஒத்தி வைத்தது. 

பின்னர், வரும் 12-ஆம் தேதி ஆறுமுகசாமி தனது விசாரணையை மீண்டும் தொடங்குவார். அன்றைய தினம் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்ப னுக்கும், பிப்.15-ஆம் தேதி சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளராக இருந்த பன்னீர்செல்வம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், புது செயலராக கோமளா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...