மதுரை ஆதின விவகாரம்: நீதிமன்ற எச்சரிக்கைக்குப் பணிந்தார் நித்யானந்தா

மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கோரி தாக்கல் செய்த மனுவை நித்யானந்தா திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும், தன்னை மதுரை ஆதினமாக அறிவித்துக் கொண்டதற்கு மன்னிப்பும் கோரினார்.

மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கோரி தாக்கல் செய்த மனுவை நித்யானந்தா திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும், தன்னை மதுரை ஆதினமாக அறிவித்துக் கொண்டதற்கு மன்னிப்பும் கோரினார். 

மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழையத் தடை விதிக்க வேண்டும் என ஜெகதலபிரதாபன் என்பவர் உயநீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2012ல் மதுரை ஆதீனத்தின் 293வது இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டேன். ஒரு முறை ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்க்கை முழுவதும் ஆதீனமாக இருப்பார். அந்த நியமனத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த பதில் மனுவில், 293-வது ஆதீனம் என்று குறிப்பிட்டதை திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். ஏனென்றால், 292-வது ஆதீனம் இருக்கும்போதும், 293-வது ஆதீனம் என்று எப்படி குறிப்பிட முடியும்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த போது பதில் மனு தாக்கல் செய்ய நித்யானந்தா தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

‘பதில் மனுவை தாக்கல் செய்யாமல், இழுத்தடிக்கும் நித்யானந்தாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுவேன்’ என்றும் எச்சரிக்கை செய்தார். மேலும், வருகிற புதன்கிழமைக்குள் நித்யானந்தா சரியான பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால், அவரைக் கைது செய்ய உத்தரவிட நேரிடும்’ எனவும் நீதிபதி கூறினார். 

அப்போது நித்யானந்தா தரப்பு வழக்கறிஞர், ‘புதன்கிழமைக்குள் பதில் மனுவை தாக்கல் செய்துவிடுவோம்’ என்று கூறினார். இந்த நிலையில், இன்று மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கூறியதை திரும்பப் பெறுவதாகவும், மடாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்டதற்கு மன்னிப்பு கோருவதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...