அரசின் மானிய விலை இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு

அரசின் மானிய விலை இருசக்கர வாகனத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசின் மானிய விலை இருசக்கர வாகனத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வேலைக்கு செல்லும் பெண்கள் ‘இருசக்கர வாகனம்’ வாங்கிக்கொள்ள ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அந்தத் திட்டத்தை ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ என தமிழக அரசு செயல்படுத்த இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் வினியோகிக்கப்பட்டது.

விண்ணப்பங்களை ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் வாங்கினர். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் இறுதி நாளான நேற்று காலை முதலே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர். போட்டிபோட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்த பெண்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது.

பெண்கள் குவிந்ததால் மண்டல அலுவலகங்கள் நிரம்பிவழிந்தன. பாதுகாப்புக்காக மண்டல அலுவலகங்களில் போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறுவதற்காக பெண்கள் திரண்டதால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் இதேநிலை தான் இருந்தது.

கடந்த 2-ந் தேதி வரை சென்னையில் 6,187 பெண்கள் இருசக்கர வாகனம் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுத்திருந்தனர். இறுதி நாளான நேற்று மட்டும் 16,773 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தம் 22,960 பெண்கள் மானிய விலை இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில், மானிய விலை இருசக்கர வாகனத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஒரு லட்சம் பேருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கான விண்ணப்பங்கள் வந்து சேராததால் இந்தக் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த அறிவிப்பால், விண்ணப்பிக்க முடியாதவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்னும் 5 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், அரசின் இலக்கைக் கடந்து விண்ணப்பங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விண்ணப்பங்கள் மீதான ஆய்வுப்பணி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் பணி 15-ந் தேதி நடக்கிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...