மணல் குவாரிகளை மூடுவதற்கு விதிக்கப்பட்ட உத்தரவிற்கு இடைக்கால தடை

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை விதித்திருந்த உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை விதித்திருந்த உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

6 மாதத்துக்குள் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மணல் குவாரி தடையால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் மணல் குவாரிகளை மூடுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. 

முன்னதாக, மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், கடந்த நவம்பர் 29-ம் தேதி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதில், மணல் குவாரிகள் அனைத்தையும் படிப்படியாக 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...