நாளை ரயில் டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.,04) 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.,04) 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கணினிகளிலுள்ள தகவல்களை சேமித்து வைக்கும் பணியால் இணையதள சேவை முடக்கப்படுகிறது. கணினி ஹேக்கர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான தொழில்நுட்ப அம்சங்களை கணினியில் சேர்க்கும் பணி நடைபெற உள்ளது. எனவே, நாளை ரயில்வே சேவையில் பாதிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளதால் 4 மணி நேரம் சேவை பாதிக்கப்படும் என்றும், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவை செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் நாளை மதியம் 2.05 முதல் 3.45 மணி வரையும், நாளை இரவு 11.30 முதல் 1.45 மணி வரையும் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. எனவே, ரயில் பயணிகள் இந்த குறிப்பிட்ட காலத்தில் டிக்கெட் புக்கிங் செய்யாமல் முன்கூட்டியே திட்டமிட்டு புக்கிங் செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பின் போது செய்யப்பட வேண்டியவை குறித்த கூடுதல் தகவல்களை கணினியில் சேர்க்க வேண்டியுள்ளதால் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...